News May 1, 2024

பொருளாதார உறவை மேம்படுத்த முடியாது

image

இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் பொருளாதார உறவை மேம்படுத்த முடியாது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். இலங்கை ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “இலங்கையும், தமிழகமும் சுற்றுலாத்துறையில் இணைந்து செயல்பட்டால் முன்னேற்றத்தை எட்ட முடியும். தற்போதைய மத்திய அரசு இருக்கும்வரை இந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை” எனக் கூறினார்.

Similar News

News March 22, 2026

ஊசிமலை வாலிபர் தவறி விழுந்ததன் எதிரொலி

image

கூடலூர் ஊசி மலைக்காட்சி முனை பகுதியில் நேற்று முன் தினம் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி தவறி விழுந்து பெரும் முயற்சிக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். இந்நிலையில் ஊசி மலைக்கு வரும் பயணிகள் ஆபத்தான பகுதிக்கு செல்வதை தடுக்க சேதம் அடைந்துள்ள இரும்பு தடுப்புகளை சீரமைக்கும் பணியில் கூடலூர் வனத்துறையினர் ஈடுபட்டனர். பராமரிப்பு பணி முடிந்து காட்சி முனை பகுதி பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.

News March 22, 2026

முன்னாள் அமைச்சர் கட்சியில் இருந்து விலகினார்

image

புதுச்சேரியில், EX அமைச்சர் சாய் சரவணகுமார் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஊசுடு தொகுதி MLA-வும், EX அமைச்சருமான அவர், மீண்டும் போட்டியிட திட்டமிட்டு தொகுதிகளில் தீவிரமாக பணிகளை செய்து வந்தார். ஆனால், கட்சி தலைமை தீப்பாய்ந்தானை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனால், வெளியேறிய சாய் சரவணகுமார், சுயேச்சையாக போட்டியிடுகிறார். மேலும், சீட்டு கிடைக்காத <<19445495>>சிலர் தவெகவுக்கு<<>> செல்ல திட்டமிட்டுள்ளனர்.

News March 22, 2026

பாஜகவிலிருந்து விலகலா? சரத்குமார்

image

தனக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் பாஜகவிலிருந்து <<19440186>>சரத்குமார் <<>>விலகவுள்ளதாகவும், இதுதொடர்பாக இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் கூட்டம் வழக்கமாக மாதந்தோறும் நடைபெறுவதுதான் என்ற அவர், தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தருவேன் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!