News December 26, 2025
தி.மலை:குழந்தை பாக்கியம் தரும் பெரியநாயகி அம்மன்!

போளூர் அருகே தேவிகாபுரத்தில் தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது.இந்த அம்மனை குழந்தை இல்லாத தம்பதிகள் மனமுருக வேண்டிக்கொண்டு விளக்கேற்றி கோவிலை சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது. பால், தயிர், இளநீர், எண்ணெய் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
Similar News
News January 21, 2026
தி.மலையில் கூண்டோடு கைது

காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை–யில் மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டதில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போளூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 693 பேர் கைது செய்யப்பட்டனர்.
News January 21, 2026
தி.மலை GH-ல் பெரும் பரபரப்பு!

அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(44). இவரது தந்தை ரங்கன். இவருக்கு உடல் நலம் பாதித்ததால் தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார். 5 மணி நேரம் ஆகியும் எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா வீடியோ எடுக்க முயன்றுள்ளார். டாக்டர் சோஜி, தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்த நிலையில் போலீசார் ராஜாவை கைது செய்தனர்.
News January 21, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (20.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


