News December 26, 2025
‘பராசக்தி’ படத்தின் கதை திருடப்பட்டதா?

‘பராசக்தி’ படத்தின் கதை திருடப்பட்டதாக உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்துள்ளார். மொழிப்போரை மையமாக கொண்டு தான் எழுதிய ‘செம்மொழி’ என்ற கதையை திருடி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Similar News
News February 5, 2026
தேர்தல் அறிக்கை.. மக்களிடம் ஐடியா கேட்கும் விஜய்!

தவெகவின் தேர்தல் அறிக்கைக்கு, பொதுமக்களும் தங்களின் பரிந்துரைகளை தெரிவிப்பதற்காக ’வெற்றித் தமிழ்நாடு’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இணையதளம் வெளியாகியுள்ளது. TN-ன் வருங்காலம் நீங்கள் இல்லாமல் இல்லை. விஜய்யின் ஆட்சி உங்களுக்கானது மட்டுமல்ல. உங்களுடைய பரிந்துரைகளாலும் ஆனது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் பரிந்துரைகளை தெரிவிக்க இந்த லிங்கை <
News February 5, 2026
இந்தியா சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறிவிட்டது: PM மோடி

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற மந்திர வழிகாட்டுதலுடன் இந்தியா சீர்திருத்த விரைவு ரயிலில் ஏறிவிட்டது என PM மோடி பேசியுள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், விக்சித் பாரதத்தின் பயணத்தில், நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்வதாக கூறினார். மேலும், கடந்த சில நாள்களில் ஐரோப்பிய ஒப்பந்தம் உட்பட உலகின் 9 பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
News February 5, 2026
பெற்றோர்களே இதை கவனியுங்க!

குழந்தைகளிடையே அதிகரித்துவரும் சமூக ஊடக பயன்பாடு, அவர்களை வெகுவாக பாதிக்கும் என்று ஸ்வீடனின் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால் நீண்ட நேரம் ஒரு விஷயத்தில் குழந்தைகளால் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்றும், ADHD போன்ற அறிகுறிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.


