News December 26, 2025
கோவை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? தீர்வு இதோ

கோவை வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)
Similar News
News January 21, 2026
கடும் நடவடிக்கை: கோவை எஸ்பி எச்சரிக்கை!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து புகாரளிக்க கட்டுப்பாட்டு அறை எண் : 94981-81212, வாட்ஸ் அப் எண் : 77081-00100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரகசியங்கள் காக்கப்படும் என, கோவை எஸ்பி கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
News January 21, 2026
கோவை அருகே விபத்து: பெண் பலி!

கோவை நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரேஷன் கடை ஊழியர் கார்த்திகா. இவர் நேற்று தனது மகன், மகள், உறவினர்கள் விக்னேஷ் ராகவ், ஜோதிகுமாரியுடன், பூச்சியூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்ப ஹரி என்பவரது ஆட்டோவில் பயணித்துள்ளனர். அதிவேகமாக சென்ற ஆட்டோ வளைவில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜோதி குமாரி உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்தனர்.
News January 21, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (20.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


