News December 26, 2025
Expiry vs Best Before: இவ்ளோ வித்தியாசம் இருக்கு தெரியுமா?

Expiry Date-க்கும், Best Before-க்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. Expiry Date என்றால் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு ஒரு உணவு பொருளை சாப்பிடக்கூடாது என அர்த்தம். அப்படி செய்தால் அதில் வளர்ந்திருக்கும் பூஞ்சைகளால் உயிருக்கே ஆபத்து வரலாம். ஆனால் Best Before என்றால், குறிப்பிட்ட தேதிக்கு பிறகு அந்த பொருளின் சுவையோ, நிறமோ, தரமோ குறையலாம் என அர்த்தம். 99% பேருக்கு தெரியாது, SHARE THIS.
Similar News
News February 5, 2026
ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்படும்: ஐடி

மறைந்த CM ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை வட்டியுடன் செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட அவரது சொத்துக்கள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை சென்னை HC-ல் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. ₹13 கோடி வரி பாக்கி செலுத்தக் கூறி ஐடி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த ஜன.31 வரை வருமான வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து ₹9.17 கோடி உள்ளது.
News February 5, 2026
விஜய்யிடம் நறுக்குன்னு என்ன கேட்கலாம்?

விஜய்யை பேட்டி எடுக்க சென்ற பத்திரிகையாளர்களை பேட்டி எடுத்து திருப்திப் பட்டுக்கொள்ளும் நிலையில் தான், விஜய்யின் மீடியா இன்டராக்சன் உள்ளது. இது சொந்த கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிரஸ்ஸை மீட் பண்ணாத அரசியல்வாதி, நாலு விஷயம் தெரிய வேண்டாமா என EPS நேரடியாகவே விஜய்யை அட்டாக் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஒருவேளை விஜய் மீடியாவை சந்தித்தால் என்ன கேள்வி கேட்கலாம்? கமெண்ட் பண்ணுங்க.
News February 5, 2026
அங்கன்வாடி பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 1-ம் தேதி 31-ம் தேதி வரை ஒரு மாதத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்டி பசங்களா, கொண்டாட்டத்துக்கு ரெடியாகிக்கோங்க!


