News December 26, 2025
விஜய்யுடன் கூட்டணி சேர காங்., செயல் தலைவர் விருப்பம்

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும் என வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு வாய்ப்பே இல்லை என செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் TN-ல் காங்கிரஸ் வளர விரும்பினால், தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக நிழலில் இருந்தால் காங்., வளர்ச்சி குன்றிவிடும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 13, 2026
வெள்ளி விலை ஒரே நாளில் ₹20,000 குறைந்தது

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹20 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹20,000 குறைந்து ₹2.8 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இந்த வார தொடக்கத்தில் இருந்தே மாற்றம் ஏதுமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று திடீர் மாற்றம் கண்டுள்ளது.
News February 13, 2026
இதை செய்தால், உங்களுக்கும் ₹1,000 கிடைக்கும்

உங்க FASTag-ல் ₹1,000 வேணுமா? ஒரு போட்டோ போதும்! தேசிய நெடுஞ்சாலைகளின் டோல் பிளாசாவில் அமைந்துள்ள கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தால், அதை தெளிவாக போட்டோ எடுத்துக்கோங்க. அரசின் Rajmargyatra ஆப்பில், நீங்க எடுத்த போட்டோவை Upload செய்து, எந்த இடம், போட்டோ எடுக்கப்பட்ட நேரம் போன்றவற்றை குறிப்பிடவும். உண்மையில் அசுத்தமாக இருந்தால், சரிபார்ப்புக்கு பிறகு உங்களுடைய FASTag ₹1,000 Topup ஆகிவிடும்.
News February 13, 2026
கவர்னராகிறாரா ஓபிஎஸ்? அரசியலில் திருப்பம்

கொங்கு & முக்குலத்தோர் சமூக வாக்குகள் பிரியாமல் கிடைக்க, EPS உடன் OPS-ஐ அதிமுக கூட்டணியில் இணைய வேண்டுமென பாஜக நினைக்கிறது. இதற்கு EPS மறுப்பதால், OPS-க்கு கவர்னர் பதவி அளிக்க பாஜக திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு EPS-ம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என பாஜக மேலிடம் கணக்கு போடுகிறதாம். இது சாத்தியமானால், அவர் மணிப்பூர் (அ) மகாராஷ்டிரா கவர்னராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


