News December 26, 2025

புதுச்சேரி: கடலில் மாயமான மாணவன் பலி

image

தந்திரயான்குப்பம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை கடலில் குளிக்கும் போது அலைக்குச் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது. இன்று காலை அந்த மாணவனின் உடல் முத்தியால்பேட்டை அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 12, 2026

BREAKING புதுச்சேரி: ரூ.3000 பொங்கல் பரிசு அறிவிப்பு

image

புதுச்சேரி மாநிலத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்க முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த தொகை பொங்கலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ பயனாளிகளின் வங்கித் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். மேலும் இதற்கான கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளதால், ஒப்புதல் கிடைத்தவுடன் முழுத் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

News January 12, 2026

புதுவை: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

புதுவை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.!

News January 12, 2026

புதுச்சேரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுச்சேரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!