News December 26, 2025
கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்த பார்வையாளர் கோவிந்தராவ் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
Similar News
News January 16, 2026
திருப்பூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே<
News January 16, 2026
திருப்பூர் மக்களே எச்சரிக்கை!

திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் உறைபனி காரணமாக, பொதுமக்கள் அனைவரும் குடிநீரைக் காய்ச்சிப் பருக வேண்டுமென மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பனிப்பொழிவால் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் முன்னெச்சரிக்கையாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வீடுகளிலும் பொது இடங்களிலும் சுகாதாரத்தைப் பேணிக் காக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
News January 16, 2026
திருப்பூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


