News December 26, 2025
பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR கணக்கெடுப்பு பணிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 387 வாக்குசாவடி மையமும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குசாவடி மையமும் உள்ளது. இதில் முதற்கட்டமாக டிசம்பர் 27,28 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Similar News
News January 21, 2026
பெரம்பலூர்: கல்லூரி மாணவி தற்கொலை – சோகம்

பெரம்பலூர் மாவட்டம் வரகூர் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செம்மொழி(20). இவர் வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் செம்மொழி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிந்து, தற்கொலைக்கான கரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.
News January 21, 2026
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.22) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பெரம்பலூர், அரனாரை, எளம்பலுர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News January 20, 2026
பெரம்பலூர்: பில்லி சூனியம் நீங்க… இங்க போங்க!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவச்சீர் அருகே மலையில் அமைந்துள்ளது பெரியசாமி கோயில். இக்கோயிலில் உள்ள செல்லியம்மனுக்கு, திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்ள பில்லி சூனியம், காற்று, கருப்பு போன்ற தீயசக்திகள் எல்லாம் விலகி செல்லும் ஸ்தலமாக விளங்குகிறது. இதனை அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க!


