News December 26, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 21, 2026
ராணிப்பேட்டையில் கொடூரம்!

கிருஷ்ணாவரத்தில் நேற்று முன்தினம் (ஜன.19) இரவு அடையாளம் தெரியாத நபர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவர் செக்கடிகுப்பத்தை சேர்ந்த வெடிங் தொழிலாளி வேலு (40) என தெரியவந்தது. மேலும் உயிரிழந்த வேலு, வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததால் ஆத்திரத்தில் அப்பெண்ணின் கணவர் மற்றும் மகன் வேலுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 21, 2026
ராணிப்பேட்டை: பெண்ணுக்கு எமனாய் வந்த வாகனம்!

வாலாஜாவை அடுத்த வன்னிவேடு, பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இளம்பெண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பெண் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த பெண் யார்? மோதிய வாகனம் யாருடையது? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 21, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன-20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


