News December 26, 2025
நெல்லை: பெண் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

நெல்லை மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வைப்பு தொகை வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News January 21, 2026
நெல்லையில் ஒருவர் மீது குண்டர் சட்டம்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் கண்ணன் என்பவரை ரெட்டியார்பட்டி எஸ்.ஆர்.குளத்தைச் சேர்ந்த ஜெகன் (32) பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டியுள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த ஜெகன் ஆணையர் மணிவண்ணன் ஆணைப்படி இன்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News January 21, 2026
நெல்லையில் 11 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு உத்தரவு

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் உத்தரவின்படி நேற்று (ஜன.20) மாநகரத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மதர்கான் சந்திப்பு காவல் நிலையத்திலிருந்து மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கும், அப்துல் ஹமீத் பெருமாள்புரம் காவல் நிலையத்திலிருந்து சிசிபிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தம் 11 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News January 21, 2026
பிஎஃப் குறைதீர்க்கும் கூட்ட தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் முகாம் வருகிற 27ம் தேதி நெல்லை மாவட்டம் ஏர்வாடி தெற்கு மெயின் ரோடு மாஸ்டர் மகாலில் நடைபெற உள்ளது. பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் நிறுவன அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம்.


