News May 1, 2024
போலீசாரை தாக்கிய 2 ஆசாமிகள் கைது

ஊட்டி நகர காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் மனோஜ்குமார் மற்றும் அருள் பாண்டி. இவர்கள் நேற்று
(ஏப் 30) படகு இல்லம் சாலையில் போக்குவரத்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக குடி போதையில் வந்த ராஜேஷ் (39), ஜீவா(38) ஆகியோர் தகராறில் ஈடுபட்டதுடன் கற்கள் வீசி தாக்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Similar News
News March 13, 2026
ஊட்டி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஊட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி நுகர்வோர் மின்சாரம் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்துத் தீர்வுகாணலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 13, 2026
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (12.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News March 13, 2026
உதகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்

உதகை ஏடிசி திடலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், செயலாளர் பாமா ரமேஷ் முன்னிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை புழக்கத்தைத் தடுக்கத் தவறிய மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


