News December 26, 2025
மோசடியில் சிக்கினார் ஜிவி பிரகாஷ்

சைபர் கிரிமினல்களின் மோசடி வலையில் தற்போது பிரபலங்களும் சிக்க தொடங்கியுள்ளனர். தாயின் இறுதிச்சடங்கிற்கு பணம் தேவை என SM-ல் கேட்டவருக்கு ஜிவி பிரகாஷ் ₹20,000 அனுப்பி உதவியுள்ளார். ஆனால், அந்த நபர் 5 ஆண்டு பழைய போட்டோவை பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்தது. பணத்தின் மீதான ஆசையில் தாய் இறந்ததாக கூறிய அந்த அருவருப்பான நபரை போலீஸ் கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்துகின்றனர்.
Similar News
News December 29, 2025
₹1 செலவில்லை.. இலவச மருத்துவ ஆலோசனை!

பல இடங்களில் மருந்துச் செலவை விட, டாக்டரின் Consultation Fees மிக அதிகமாக உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனை தவிர்க்க, மத்திய அரசு இ-சஞ்சீவனி என்ற திட்டத்தை வழங்குகிறது. இணையதளம் மூலம் தொலைபேசி / வீடியோ கால் மூலம் நோய்கள் & சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். இதில் வழங்கப்படும் இ-பிரிஸ்கிரிப்ஷனை வைத்து மருந்துகளும் வாங்கலாம். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 29, 2025
தவெகவை நெருங்குகிறதா காங்கிரஸ்? KAS ரியாக்ஷன்!

TN கடன் குறித்து காங்கிரஸ் நிர்வாகியான <<18699142>>பிரவீன் சக்ரவர்த்தி<<>> திமுக அரசை விமர்சித்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய KAS, தவெகவுடன் காங்கிரஸ் இணைய வேண்டும் என அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் பல இடங்களில் கருத்து பரிமாறி வருகிறார்கள். ஆனால் அவை என் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. அவை கவனத்திற்கு வந்தால் அதுகுறித்து பதிலளிப்போம் என கூறியுள்ளார்.
News December 29, 2025
மோசடி புகாரில் சிக்கிய நடிகை ராணி

அலைகள், அத்திப்பூக்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ராணி, பண மோசடி புகாரில் சிக்கியுள்ளார். கரூரில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் ₹10 லட்சம், கார் உள்ளிட்டவற்றை அவர் மோசடி செய்திருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதில், பண மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில் ராணி, அவரது கணவர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாகியுள்ள ராணியை போலீஸ் தேடி வருகிறது.


