News December 26, 2025
அதிமுகவுக்கு CM ஓபன் சேலஞ்ச்!

திமுக அரசு நிகழ்த்திய சாதனைகளில் 5%-ஆவது அதிமுக ஆட்சியில் நடந்தது என சொல்லமுடியுமா என ஓபன் சேலஞ்சாக கேட்கிறேன் என CM ஸ்டாலின் பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், சிலரை போல் வாயில் வடை சுடும் அரசு அல்ல. ஆட்டோமொபைல் உற்பத்தி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் திமுக முதலிடத்தில் உள்ளது. இனி எப்போதும் ஏறுமுகம் தான் என கூறியுள்ளார்.
Similar News
News December 31, 2025
நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம் தெரியுமா

‘123PAY UPI’ மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். ‘8045163666’ என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். இப்பதிவை நண்பர்கள் அனைவருக்கு ஷேர் பண்ணுங்க.
News December 31, 2025
பொங்கல் கரும்பை நேரடியாக கொள்முதல் செய்க: அன்புமணி

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தோ, அதில் கரும்பு இடம்பெறுமா என்பது குறித்தோ இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை என அன்புமணி விமர்சித்துள்ளார். பன்னீர் கரும்பை கொள்முதல் செய்வதில் உள்ள குளறுபடிகளால், விவசாயிகளின் வலி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்வதோடு, தொகுப்பில் வழங்கும் கரும்புகளின் எண்ணிக்கையை 2-ஆக அதிகரிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 31, 2025
தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் தீர்ப்பை ஏற்காதது முட்டாள்தனம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி, சிவன், மீனாட்சி, திருக்குறளை எப்படி சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாதோ, தீபம் ஏற்றுவதையும் தடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். மேலும், தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் காட்டாமாக குறிப்பிட்டுள்ளார்.


