News May 1, 2024
வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் இரங்கல்

விருதுநகர் அருகே தனியார் வெடிபொருள் கிடங்கில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வெடிவிபத்து குறித்த செய்தியறிந்ததும் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்று உறுதி தெரிவித்தார்.
Similar News
News March 10, 2026
3 ஆண்டுகளில் 5 கோப்பைகள் வென்ற இந்திய அணிகள்!

2023-ம் ஆண்டு Men’s ODI WC-யை இந்தியா நழுவவிட்டது ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது. இதையடுத்து, வீறுகொண்டு எழுந்த இந்தியா 5 ICC கோப்பைகளை வென்றுள்ளது. ODI WC-யை தவறவிட்ட ரோஹித் படை, 2024 T20I WC & 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. பெண்கள் அணி 2025 ODI WC-யை முதல்முறை முத்தமிட்டது. சில மாதங்களுக்கு முன், U19 இந்திய அணி ODI WC-யை வென்ற நிலையில், தற்போது SKY படை T20I WC-யை தக்கவைத்து கொண்டுள்ளது.
News March 10, 2026
வீடுகள் விலை… ஒரே நாளில் ₹7.3 கோடி குறைந்தது

போர் காரணமாக துபாய் மற்றும் அபுதாபியில் ரியல் எஸ்டேட் பெரும் சரிவை சந்தித்துள்ளது. அபுதாபியில் 4BHK அடுக்குமாடி குடியிருப்பின் விலை ஒரே நாளில் ₹7.3 கோடி குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர்ச் சூழல் தொடர்ந்தால் UAE-யின் பொருளாதாரம் சரியும் என்றும், இது வளைகுடாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
News March 10, 2026
BIG FLASH: சர்வதேச தரத்தில் மாறப்போகும் மதுரை ஏர்போர்ட்

மதுரை ஏர்போர்ட்டை சர்வதேச தரத்தில் மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓடுதளம் 2,285 மீட்டரிலிருந்து 3,810 மீட்டராக நீட்டிக்கப்படுகிறது. இதற்காக 653 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, புதிய முனையம் மற்றும் நவீன வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான மதுரை ஏர்போர்ட் நவீன மயமாக்கப்பட்டால், தென் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.


