News December 26, 2025
பெண் குழந்தைகளின் படிப்புக்கு காசு தரும் அரசு

கிராமப்புறங்களில் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC/DNC சமூகத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு TN அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. அதன்படி, 3 – 5-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ₹500-ம், 6-வது பயிலும்போது ₹1000-ம் வழங்கப்படுகிறது. இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. திட்டத்திற்கு விண்ணப்பிக்க பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகவும். SHARE.
Similar News
News December 31, 2025
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்!

*உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட
வைக்கக்கூடாது *சிரிக்காத நாளெல்லாம் வீணான நாட்களே *இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்னைகள் உட்பட *சர்வாதிகாரிகள் தங்களை சுதந்திரமாக இருந்துக் கொண்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் *உன் மனம் வலிக்கும் போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை *புன்னகைத்துப் பாருங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்
News December 31, 2025
அரசியல் பிரபலத்தின் வீட்டில் துயரம்

மூத்த அரசியல்வாதி தமிழருவி மணியனின் மனைவி பிரேமாகுமாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது உடலுக்கு வைகோ, பாரிவேந்தர் உள்ளிட்டோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதிச்சடங்கு இன்று காலை விருகம்பாக்கம் இல்லத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
News December 31, 2025
புத்தாண்டில் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்!

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘ஜனநாயகன்’ டிரெய்லர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை ஜன.1-ம் தேதி படக்குழு அறிவிக்கவுள்ளதாகவும், ஜன.2 மாலை டிரெய்லர் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது. அதோடு ஜன.4-ல் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு டிவியில் ஒளிபரப்பு ஆவதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய்யின் One Last Dance-ஐ பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்?


