News December 26, 2025
21-ம் ஆண்டு நினைவு தினம்: கண்ணீர் கடலில் கடலூர்..

கடந்த 2006-ம் ஆண்டு, டிச.26-ம் தேதி தமிழக கடலோர பகுதிகளை சுனாமி பேரலை தாக்கியது. இதன் காரணமாக கடலூர், நாகை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இன்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பல்வேறு மீனவ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News December 29, 2025
கடலூர்: கணவரை கத்தியால் வெட்டிய மனைவி!

கடலூர் முதுநகர் அடுத்த கண்ணாரபேட்டையைச் சேர்ந்தவர் காசிநாதன் மனைவி சந்திரா (68). காசிநாதன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து சந்திராவுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்திரா, காசிநாதனை கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த காசிநாதன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சந்திராவை கைது செய்துள்ளனர்.
News December 29, 2025
கடலூர்: போலி நகை அடமானம் வைத்த 2 பேர் கைது

மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜேந்திரன் (31), செல்வமணி (32) இருவரும் சிதம்பரம் மாலை கட்டி தெருவில் உள்ள நகை அடகு கடையில் கடந்த டிச.22-ம் தேதி அன்று மருத்துவ செலவிற்குத் தேவைப்படுவதாக 24 கிராம் 916 நகை என கூறி அடகு வைத்து ரூ.1,90,000 ஆயிரம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், போலி என அறிந்ததும் கடை உரிமையாளர் ஹீராசத் கோத்தாரி அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.
News December 29, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.28) இரவு 10 முதல் இன்று (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


