News December 26, 2025

கள்ளக்குறிச்சியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கவும், பல்வேறு நலத்திட்ட பணிகளை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Similar News

News January 12, 2026

முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

image

கள்ளக்குறிச்சி: முத்தமிழ் சங்கம் கட்டிடத்தில், முத்தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா, கவியரங்கம் திருக்குறள் திருவிழா, கவிஞர் வெண்ணிலாவின் நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு மாவட்ட முத்தமிழ் சங்கத் தலைவர் முருககுரு வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக சங்கராபுரம் திமுக ஒன்றிய செயலாளர் ஆறு கதிரவன் கலந்துகொண்டார்.

News January 12, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.12) மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெற்றோர்களுக்கு தையல் மெஷின், முதுகு தண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News January 12, 2026

கள்ளக்குறிச்சி: இனி ஆதார் வாங்க, HI போடுங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!