News December 26, 2025
சிவகாசி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி அருகே திருத்தங்கல் கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி கற்பகம் (58). இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ச்சியாக மருத்துவம் பார்த்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளார். வயிற்று வலி தீராததால் மனமுடைந்த இருந்த கற்பகம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 30, 2025
விருதுநகர் அருகே உடல் நசுங்கி பெண் பலி

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்டான் என்பவரின் மனைவி பொன்னுத்தாய். இவர் அருப்புக்கோட்டை காந்தி நகர், பிள்ளையார் கோயில் அருகில் இன்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
News December 30, 2025
விருதுநகர் அருகே சம்பவ இடத்திலே தம்பதியினர் பலி

சம்பகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிழவ மூர்த்தி, ஜோதியும் தம்பதியினர். எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று கமுதிக்கு வந்தபோது காவடிபட்டி என்ற இடத்தில் சாலையோரமாக பழுதாகி நின்ற டிப்பர் லாரி மீது கிழவ மூர்த்தி ஓட்டிச் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
News December 30, 2025
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <


