News May 1, 2024

95 ஆண்டுகளில் ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு

image

உலகின் மிகச்சிறிய நாடான வாடிகன், 1929 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டோடு, வாடிகன் உருவாக்கப்பட்டு 95 ஆண்டுகளாகும் நிலையில், அங்கு இன்று வரை ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை. அங்கு வரும் பெண்கள் கர்ப்பம் தரித்தது தெரிந்த உடனேயே, பிரசவம் முடிந்து குழந்தை பிறக்கும் வரை இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்படுவது கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அங்கு இதுவரை ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை.

Similar News

News February 10, 2026

எய்ம்ஸ் தாமதத்திற்கு திமுகவே காரணம்: அண்ணாமலை

image

மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடல் கட்டுமான பணிகளுக்கு திமுக அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் எத்தனையோ முறை மதுரை சென்ற CM, எய்ம்ஸ் கட்டுமான பணிகளை பார்த்திருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அங்கிருந்த மரங்களை வெட்டுவதற்கு கூட TN அரசு அனுமதி தரவில்லை என்றும், மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு திமுக அரசு தான் காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.

News February 10, 2026

கார்களின் விலை மளமளவென குறைந்தது!

image

கார் வாங்க போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், ஹோண்டா தனது வெவ்வேறு மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹1.97 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் கார்களுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News February 10, 2026

இனி AI என குறிப்பிடுவது கட்டாயம்: மத்திய அரசு

image

இனி AI மூலம் உருவாக்கப்படும் அனைத்து போஸ்ட்களிலும் அவை AI என்று குறிப்பிடுவது அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தவறான அல்லது சட்டவிரோத AI போஸ்ட்களை, சமூக ஊடக தளங்கள் 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது, SM-ல் டீப்ஃபேக் வீடியோக்கள் & தவறான தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!