News December 26, 2025
தேனி: கார் மோதியதில் தந்தை, மகன், மகள் படுகாயம்!

சில்வார்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் நேற்று (டிச.25) அவரது 11 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் திண்டுக்கல்-தேனி பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கிருஷ்ணா என்பவர் ஓட்டி வந்த கார் இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News December 28, 2025
தேனி மக்களே.. இனி Whatsapp மூலம் தீர்வு…

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
தேனி: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ

பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை வீட்டில் வைத்து மே மாதம் திருமணம் செய்தார். தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் அளித்த புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் அரவிந்தன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
தேனி: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள்<


