News December 26, 2025
திண்டுக்கல்: போதையில் நடத்த விபரீதம்!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த பிரபு (35) குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி ஈஸ்வரி (32)யை சம்மட்டியால் தாக்கி கொலை செய்தார். காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பிரபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
திண்டுக்கல்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இ<
News December 29, 2025
திண்டுக்கல்: 10th பாஸ் போஸ்ட் ஆபீஸ் வேலை!

திண்டுக்கல்: இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். <
News December 29, 2025
குஜிலியம்பாறை: கைவரிசை காட்டிய நண்பர்கள்!

திண்டுக்கல் குஜிலியம்பாறையைச் சேர்ந்த கருப்பசாமி, திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றபோது அவரது கார் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பசாமியின் வீட்டின் அருகே வசிக்கும் செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர் இருளப்பசாமி ஆகியோரே காரைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், காரை மீட்டனர்.


