News December 26, 2025
புதுச்சேரி வேளாண் துறை மூலமாக சிறப்புப் பயிற்சி

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலமாக ஆத்மா திட்டத்தின் வாயிலாக நெல்லில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சமீபத்திய உத்திகள் குறித்த பயிற்சி மதகடிப்பட்டில் நேற்று நடைபெற்றது. இதில் துணை வேளாண் இயக்குநர் ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி, வேளாண் அலுவலர் நடராஜன் விவசாயிகளை வரவேற்று, தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விளக்கினார்.
Similar News
News January 12, 2026
புதுச்சேரி: புயல் எச்சரிக்கை அறிவிப்பு

புதுச்சேரி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக குளிர்த்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
News January 12, 2026
புதுச்சேரி: மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி சாணக்கியபுரியில் உள்ள ஹோட்டல் அசோக்கில், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு, மாநிலத்திற்கான முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.