News December 26, 2025
நெல்லை: பீஸ் இல்லாமல் இலவச வக்கீல் வேண்டுமா?..

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
நெல்லை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04575-242561
தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 27, 2025
நெல்லை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 27, 2025
நெல்லை: போலீசாரை வெட்ட முயற்சி; இருவருக்கு வலைவீச்சு

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ரோந்து சென்ற போலீசார், நடுரோட்டில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய சுரேஷ், ஐயப்பன் ஆகியோரைப் பிடிக்க முயன்றனர். போலீசாரை அவதூறாக பேசிய இருவரும் அரிவாளால் வெட்ட முயன்று தப்பி ஓடினர். சப்-இன்ஸ்பெக்டர் கணபதி புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த களக்காடு போலீசார், ரவுடி சுரேஷ் உட்பட இருவரையும் தேடி வருகின்றனர்.
News December 27, 2025
நெல்லை: போலீசாரை தாக்கிய இருவர் கைது

பாளை தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் தலைமையில் காவலர் கார்த்திக் ராஜா, அரியகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நொச்சிகுளம் பாலசுந்தர் என்பவர் வந்த ஆட்டோவை நிறுத்திய போது காவலர் கார்த்திக் ராஜாவை தனது தந்தை சகோதரருடன் சேர்ந்து தாக்கினார் இது குறித்து போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து பாலசுந்தர் அவரது சகோதரர் கனகராஜை தாலுகா போலீசார் கைது செய்தனர்.


