News December 26, 2025

குமரியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

image

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 13, 2026

குமரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

குமரி மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற

1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News January 13, 2026

அருமனையில் 2 முதலைகள் நடமாட்டத்தால் பீதி

image

களியல் கோதையாறில் முதலை பீதி அகலாத நிலையில் தற்போது அருமனை அருகே கல்லுவரம்பு கோதையாறு பகுதியில் 2 முதலைகள் நடமாடியதை பார்த்து சிலர் அதனை படம் பிடித்துள்ளனர். இந்த முதலைகள் பாறை மீது கிடப்பதை போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வரு கிறது. இதனால் அம்பலக்கடை, கொக்கஞ்சி, கோட்டக்ககம் பகுதி மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர் . முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 13, 2026

சுசீந்திரம் கோவில் தெப்பக்குளம் டெண்டர் கோரப்பட்டுள்ளது

image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அருள்மிகு தாணுமாலயசுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தின் ஒருபகுதி கருங்கல் சுவரை பழமை மாறாமல் மீண்டும் கட்டும் பணிக்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளி அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!