News December 26, 2025

ராணிப்பேட்டை: பெண்களுக்கு கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

image

தமிழக பெண்களுக்கென சிறப்பு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000, மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000, ஏழை கைம்பெண்ணின் மகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். SHARE NOW

Similar News

News January 9, 2026

பாதுகாப்பு வைப்பறை கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை

image

இன்று (ஜன.9) இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM machine) பாதுகாப்பு வைப்பறை கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

News January 9, 2026

வாலாஜா மகளிர் கல்லூரியில் காணொளி மூலம் பார்வை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.09) திருவள்ளூர் மாவட்டத்தில் “உங்கள் கனவை சொல்லுங்க” என்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வை இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் இராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பார்வையிட்டனர்.

News January 9, 2026

இது நம்ம ஆட்டம் 2026 – இராணிப்பேட்டை மாவட்டம்

image

தமிழ்நாட்டின் மிகப்பெரிய இளைஞர் விளையாட்டு திருவிழாவான “இது நம்ம ஆட்டம் 2026” இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் 16 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகள் ஜன.22 முதல் பிப்.08 வரை ஊராட்சி, மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் நடைபெறும்.
பதிவு செய்ய கடைசி தேதி ஜன.21. பங்கேற்க விரும்புவோர்
www.sdat.tn.gov.in, www.cmyouthfestival.sdat.in இணையதளங்களில் பதிவு செய்யலாம்.

error: Content is protected !!