News December 26, 2025
நாமக்கல் பக்தர்களின் கவனத்திற்கு!

நாகர்கோவிலில் இருந்து ஆந்திர மாநிலம் காச்சிகுடா வரை செல்லும் வாராந்திர விரைவு ரயில் (16354), நாளை சனிக்கிழமை (டிசம்பர் 27) மாலை 5:40 மணிக்கு நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இந்த ரயில் நாமக்கல்லில் இருந்து காட்பாடி, திருப்பதி, கடப்பா, கூட்டி, கர்னூல், மஹபூப்நகர் மற்றும் ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.
Similar News
News January 12, 2026
நாமக்கல் பயணிகளுக்கு முக்கிய எண்கள்!

நாமக்கல் மக்களே, பொங்கலை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பில் பயணிகள் வசதிக்காக, பேருந்துகளின் இயக்கம் குறித்த தகவல் (ம) புகார்களுக்கு 94450 14436 என்ற எண்ணை வெளியிட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணம் தொடர்பாக புகார்கள் இருந்தால் 1800 425 6151 (Toll Free), 044-24749002, 044 26280445, 044-26281611 எண்களில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 12, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 14-ம் தேதி பொதுமக்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து குக்கிராமங்களிலும் பெரிய அளவிலான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு கோல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
மோகனூரில் வசமாக சிக்கிய வாலிபர்!

நாமக்கல்: மோகார், கணவாய்பட்டி பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். ஆட்டோவில், சந்தேகத்திற்கு இடமான வகையில், சாக்கு மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முகமது வாசிம் என்பவரை கைது செய்து 300 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


