News December 26, 2025
தேனி: கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது!

தேனி நகர் போலீசார் தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று (டிச.25) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த கவியரசன் (24) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கவியரசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News December 30, 2025
தேனியில் வைப்புத் தொகை தீர்வு முகாம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில், வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தீர்வு முகாம் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் வங்கிகளில் உரிமைக் கோரப்படாத ரூ.9,45,611 வைப்புத்தொகை சம்பந்தப்பட்ட 8 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.
News December 30, 2025
தேனி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

தேனி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News December 30, 2025
தேனி: கீழே தவறி விழுந்து பரிதாப பலி

ராஜதானி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (41). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் ஆண்டிப்பட்டி பகுதியில் கீழே விழுந்து பேச்சு மூச்சின்றி கிடப்பதாக உறவினர் மூலம் தெரியவந்தது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.


