News December 26, 2025
ஈரோடு: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். NPCI என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE பண்ணுங்க.
Similar News
News January 13, 2026
ஈரோடு: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு

ஈரோடு மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News January 13, 2026
ஈரோட்டில் சவுக்கு சங்கர் மீது புகார்

பகுஜன் சமாஜ் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பழனி தலைமையிலான கட்சியினர் எஸ்.பி. சுஜாதா-விடம் மனு அளித்தனர். அதில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, சவுக்குசங்கர் பணம் சம்பாதித்து வருகிறார். விமர்சனம் என்ற பெயரில் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரையும் இழிவுபடுத்தி பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
News January 13, 2026
ஈரோடு அருகே தவறி விழுந்தவர் உயிரிழப்பு

ஈரோடு, மாதம்பாளையத்தைச் சேர்ந்தவர் குபேரன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்துள்ளார். இதில் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குபேரன் பரிதாபமாக உயிரிழந்தார்.


