News December 26, 2025
கிருஷ்ணகிரி: விபத்தில் துடிதுடித்து பலி!

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே ஆட்டோ ஒன்று முன்னாடி சென்று கொண்டிருந்த நிலையில், பின்னால் வந்து கார் அதிவேகமாக சென்று ஆட்டோவின் மீது மோதியதில், ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில், ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஓட்டுனர் ஆட்டோவின் அடியில் சிக்கிக் கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News December 31, 2025
கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில், 2025-26ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ராபி பருவ நெல், ராகி, உளுந்து, பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் காளிமுத்து தலைமையில் ஏக்கர் நெல்லுக்கு ரூ.474.90, ராகிக்கு ரூ.174, உளுந்திற்கு ரூ.255 தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை கொள்ளவும்.
News December 31, 2025
கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில் பணி, பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள், இலவசமாக பயணம் செய்ய பயண சலுகை அட்டை வழங்கப்பட உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான தேசிய அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை, பணி / பயிற்சி சான்றிதழ், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களில் TNEGA ஆன்லைன் முகவரியில் விண்ணப்பித்து இலவச பயண அட்டை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
கிருஷ்ணகிரி: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

கிருஷ்ணகிரி மக்களே, அடிக்கடி வீட்டில் கரண்ட், வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


