News December 26, 2025
மயிலாடுதுறை: நகர செயலாளர் நியமனம்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மயிலாடுதுறை நகர கழக செயலாளராக நாஞ்சில் கார்த்திக் என்பவர் இன்று மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பரிந்துரையின் பெயரில் அதிமுக தலைமையினால் ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 27, 2025
மயிலாடுதுறை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
மயிலாடுதுறை: மேம்பாலம் திறக்கும் தேதி அறிவிப்பு

மயிலாடுதுறை நகரில் உள்ள சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் வருகிற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் நேற்று தெரிவித்தார். அதேபோல் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் வருகிற ஜனவரி 15ஆம் தேதிக்குள் திறந்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? இதை பண்ணுங்க!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க


