News December 26, 2025
மதுரை: வயல்வெளியில் மயங்கி கிடந்த முதியவர் பலி

மேலூர் அருகே தெற்கு தெரு வயல்வெளி பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தெற்குதெரு விஏஓ மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் நேற்று இறந்தார். இறந்த நபர் யார் என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
மதுரை: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

மதுரை மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 7, 2026
முதல்வர் ஸ்டாலினின் நாளைய பயண விவரங்கள்

முதல்வர் ஸ்டாலின் அவர் இல்லத்தில் இருந்து நாளை (பிப்.7) காலை 10.00 மணிக்கு புறப்பட்டு 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து GRT Grand Hotel சென்று மதியம் தங்குகிறார். மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் வந்து 7.30 மணிக்கு விமானத்தில் சென்னை செல்கிறார்.
News February 6, 2026
மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் எண்கள்

மதுரை மாவட்டத்தில் இன்று (06.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக போலீசுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெறலாம்.


