News December 26, 2025
ராணிப்பேட்டை: கணவன் முன்னே மனைவி பலி!

அரக்கோணத்தை சேர்ந்த பிரவின் (35), பிங்கி (30) தம்பதி, நேற்று(டிச.25) கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, காஞ்சிபுரம், வெள்ளை கேட் மேம்பாலத்தில் காரை திருப்பிய போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதியது. உடன் பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில், கார் இடையில் சிக்கி நொறுங்கியது. இதில் பிங்கி உயிரிழந்தார். பிரவின் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News January 12, 2026
ராணிப்பேட்டை: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 12, 2026
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் c<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News January 12, 2026
ராணிப்பேட்டையில் திக்குமுக்காடும் மக்கள்!

தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் இணைக்க வேண்டி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கடந்த 6ஆம் தேதி முதல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், ராணிப்பேட்டை ஊராட்சிகளில் குடிநீர், மின் விளக்கு, பராமரிப்பு, தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் பாதிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், ஊராட்சி அலுவலங்கள் தொடர்ச்சியாக கிடப்பதும் குறிப்பிடத்தக்கது.


