News December 26, 2025
செங்கல்பட்டு ஆட்சியர் அறிவித்தார்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இக்கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Similar News
News January 14, 2026
செங்கல்பட்டு காவல்துறை சார்பில் போகி வாழ்த்துக்கள்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட மக்களுக்கு இன்று (14.01.2026) இனிய போகித் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பழையன கழிந்து புதியன புகும் இந்நாளில், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, புகையில்லா போகி கொண்டாடி சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
News January 14, 2026
செங்கை: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

செங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 14, 2026
செங்கை: பசு மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


