News December 26, 2025

திருவள்ளூர்: கிணற்றில் மூழ்கி பெண் சாவு!

image

பொதட்டூர் பேட்டை, நாகாலம்மன் கோஇல் தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி(65). இவரது மனைவி சாரதா(55). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று(டிச.25) காலை குளிக்கச் செல்வதாகக் கூறி, வெளியே சென்ற சாரதா, வெகு நேரம் ஆகியும் திரும்பவில்லை. அப்போது பாரதியார் நகரில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 29, 2025

10, 12ஆம் வகுப்பு முதலாம் திருப்புதல் தேர்வு ஆரம்பம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி சேர்ந்த 2025 -2026 கல்வியாண்டில் 10 ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு முதலாம் திருப்புதல் தேர்வுகள் வரும் ஜனவரி 7ஆம் தேதி முதல் ஆரம்பம் ஆகிறது என்று தேர்வு கால அட்டவணையோடு திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது.

News December 29, 2025

திருவள்ளூர்: ’நான் செத்துவிட்டேனா?’ – எம்.எல்.ஏ ஆத்திரம்

image

புதுமாவிலங்கை கிராமத்தில் அமைச்சர் நாசர் கலந்து கொண்ட, நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் கோபித்து கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நன்றி உரையின் போது, பெயரை அதிகாரிகள் கூறவில்லை என கோபமடைந்து புறப்பட்டு சென்றார். மேலும் ’நான் வருவதற்கு முன்பே ஓபன் பண்ணா எப்படி? நான் செத்துட்டேன்னு நினைத்தீர்களா?’ என ஆட்சியரிடம் கோபப்பட்டு சென்றார்.

News December 29, 2025

பிரவீன் சக்ரவர்த்திக்கு சசிகாந்த் செந்தில் எதிர்ப்பு

image

உ.பி.யை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ‘கடனளவை மட்டுமே வைத்து ஒரு மாநிலத்தை மதிப்பிடுவது என்பது வெறும் உடல் எடையை வைத்து ஒருவரின் உடற்தகுதியை தீர்மானிப்பது போன்றதாகும்’ என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!