News December 26, 2025
திண்டுக்கல் வசமாக சிக்கிய ஆசாமிகள்!

திண்டுக்கல் தோட்டனூத்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவர் நேற்று தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன் மற்றும் 5,000 ரூபாயைப் பறித்துச் சென்றனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தாலுகா போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மேட்டூர் தங்கமணி (30) மற்றும் பாலசுப்பிரமணி (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News January 15, 2026
திண்டுக்கல்: போஸ்ட் ஆபீஸில் வேலை!

திண்டுக்கல் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 15, 2026
நத்தம் அருகே வசமாக சிக்கிய மூவர்!

நத்தம் காவல் ஆய்வாளர் பொன்குணசேகரன் தலைமையிலான போலீசார் குட்டுபட்டி – பாலப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபாகரன் (30), பெருமாள் (23) மற்றும் ஆறுமுகம் (23) ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டப் பணம் மற்றும் சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News January 15, 2026
திண்டுக்கல்லில் தட்டி தூக்கிய EX அமைச்சர்!

திண்டுக்கல், சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில், வெள்ளோடு மற்றும் அடியனூத்து ஊராட்சிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். கட்சி நிர்வாகி உதயகுமார் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கட்சியில் இணைந்த இளைஞர்கள் நத்தம் விஸ்வநாதனுக்கு மாலை அணிவித்து வரவேற்றார்.


