News December 26, 2025
சென்னையில் இடியாப்பம் விற்க உரிமம் கட்டாயம்!

சென்னையில் இடியாப்பம் விற்பனை செய்ய உரிமம் கட்டாயம் என உணவு பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பல்வேறு சிறுகுறு தொழில் விற்பனையாளர்கள் சுயதொழிலாக செய்து வரும் நிலையில் அவர்கள் ஆன்லைனில் இலவசமாக உரிமத்தை பெறலாம். ஆண்டுக்கு ஒருமுறை அவை புதுபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இடியாப்பம் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
ஆம்னி பேருந்து குறித்து புகார் அளிக்கலாம்!

சென்னை பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தல் மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தொலைபேசி மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுந்செய்தி அல்லது குரல் பதிவாகவோ மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
சென்னை: ரவுடி கொலை… 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த ரவுடி ஆதியை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தின் போது பணியில் இருந்த மூன்று பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஆண்காவலர் என மொத்தம் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
News January 13, 2026
சென்னை மாநகராட்சி – தொழில் உரிமம் புதுப்பிப்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வர்த்தகம் செய்ய வணிகர்கள் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி தொழில் உரிமம் பெற உரிமக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே புதுப்பிக்க வேண்டும். தொழில் உரிமம் புதுப்பிக்க, நிலுவையின்றி தொழில் வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஏற்கனவே பெறப்பட்ட உரிமத்தின் நகல் மற்றும் கட்டணம் அவசியம் என தெரிவித்துள்ளது.


