News December 26, 2025

பள்ளிப்பாளையத்தில் வசமாக சிக்கிய இருவர்!

image

பள்ளிப்பாளையம் டி.எஸ்.பி., கவுதம் தலைமையில், வெப்படை போலீசார் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் தடை செய்யப்பட்ட புகை யிலைகளை விற்பனை செய்து கொண்டிருந்த குமார் (49), மற்றும் வெங்கடாசலம் (46) ஆகிய இரண்டு பேரை வெப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து புகை யிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 5, 2026

நாமக்கல்: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

image

நாமக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<> Aadhaar App <<>>மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அதிகம் SHARE பண்ணுங்க!

News February 5, 2026

தி.கோடு அருகே மர்ம மரணம்: போலீஸ் விசாரணை!

image

திருச்செங்கோடு வீரராகவ முதலியார் தெருவைச் சேர்ந்த நகைத்தொழிலாளி பிரசன்னபூபதி (38), நேற்று சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் உளுந்து கொள்முதல் திருச்செங்கோடு விற்பனைக்கூடத்திலும், பாசிப்பயிறு கொள்முதல் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு விற்பனைக்கூடங்களிலும் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு நகல்களுடன் விற்பனைக்கூடங்களை அணுகிப் பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!