News December 26, 2025
விருதுநகர்: 5 பேர் மீது பாய்ந்த போக்சோ

ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாரிச்சாமிக்கு 16 வயது சிறுமியை இவரது தாய் பொன்னுத்தாய், சகோதரர் அசோக் , அண்ணி கௌசி, மாமியார் மாரித்தாய் ஆகியோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்தததையடுத்து வெம்பக்கோட்டை ஊர் நல அலுவலர் மகாலட்சுமி விசாரித்தத்தில் உண்மை என தெரிந்தது. இதையடுத்து சிறுமியின் கணவர் உட்பட 5 பேர் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 19, 2026
விருதுநகர்: பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

ராயல் மெளஸி மில்க் டீ மற்றும் நியூ எரா ராயல் மெளஸி மில்க் டீ ஆகிய தளங்களில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவோருக்கு கமிஷன் அடிப்படையில் அதிக பணம் திருப்பி கொடுப்பதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அதிகமான அளவில் பணம் வசூல் செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இதில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என காவல் ஆய்வாளார் தெரிவித்துள்ளார்.
News February 19, 2026
BREAKING விருதுநகருக்கு மஞ்சள் அலர்ட்

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(பிப்.21) விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT
News February 19, 2026
விருதுநகர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


