News December 26, 2025
விழுப்புரம்: டிராக்டர் மோதி மாணவன் துடிதுடித்து பலி!

விழுப்புரம்: வளவனூர் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன் (17). இவர் வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று (டிச.25) சாலை நடந்து சென்ற போது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி வளவனூர் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 30, 2025
விழுப்புரத்தில் மின்தடை.. இதில் உங்க ஏரியா இருக்கா?

விழுப்புரம் மாவட்டத்தில், அரசூர் மற்றும் காரணைபெரிச்சானூர் துணை மின் நிலையங்களில் இன்று (டிச.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசூர், ஆனத்தூர், சேமங்கலம், குமாரமங்கலம், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர். ஆயந்தூர், ஆலம்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 30, 2025
விழுப்புரம்: 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி!

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் பகுதியைச் சேர்ந்த ரோசா (35), தனது 3 குழந்தைகளுடன் கணவரின்றி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது கணவர் சொத்துக்களை மாமனார், மாமியார் அபகரித்துவிட்டதாக நேற்று தனது குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.அவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவரை சமாதானம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 30, 2025
விழுப்புரம்: இரவு ரோந்துப் பணியின் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் மார்பில், நேற்று இரவு – இன்று (டிச.29) காலை வரை ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் ஷேர் பண்ணுங்க!


