News December 26, 2025
திருவள்ளூர்: தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி

திருவள்ளூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் பூண்டி ஒன்றிய செயலாளர் விஜய் பிரபுவின் புகைப்படம் இல்லாததால், அவர் சத்திய நாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்று, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News January 2, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

கும்மிடிப்பூண்டி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் நிக்சன்(48). கார் டிரைவரான இவருக்கு கிருஷ்ண மாலா(39) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் இருந்தனர். கடந்த 2023ஆம் தேனி மாவட்டம், கம்பம் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது, அவரது மகள் பேமினா(14) சுருளி அருவியில் விழுந்து உயிரிழந்தார். இதனால், மனமுடைந்த நிக்சன், நேற்று(ஜன.1) தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News January 2, 2026
ஆவடி புதிய காவல் ஆணையாளர் பதவியேற்பு!

ஆவடி காவல் ஆணையாளராக காவல்துறை கூடுதல் இயக்குனர்
பிரேம் ஆனந்த் சின்கா பொறுப்பேற்று, தமிழ்நாடு காவல்துறையின் தென் மண்டல காவல் துறை தலைவராக பணிபுரிந்து வந்த பிரேம் ஆனந்த் சின்கா, காவல்துறை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, ஆவடி காவல் ஆணையரகத்தின் நான்காவது புதிய காவல் ஆணையாளராக நேற்று(ஜன.1) பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
News January 2, 2026
திருவள்ளூர்: தாய் திட்டியதால் VAO தற்கொலை

பொன்னேரி அடுத்த தேவனாம்பட்டு அகரம் பகுதியைச் சேர்ந்த அருணா(27). கீரப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். தாய் திட்டியதால் அவர் 2 தினங்களுக்கு முன்பு இரவு விஷம் அருந்தியுள்ளார். மயக்கிய அவரை, பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று (ஜன.01) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


