News December 26, 2025
REWIND: சுனாமி பேரலை 8,000 தமிழர்களை கொன்ற நாள்!

ஆழிப்பேரலை(Tsunami) கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்த துயரத்தின் 21-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2004-ம் ஆண்டு இதே நாளில் கடற்கரை ஓரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்கள் உள்பட 7,993 பேர் உயிரிழந்தனர். தாய், தந்தை, மனைவி, அக்கா, தம்பி, பிள்ளைகள் என உறவுகளை இழந்தவர்கள் இன்னும் அந்த துயரிலிருந்து மீளாமல் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
Similar News
News February 1, 2026
குறட்டை விட்டால் மாரடைப்பு வரும்.. உஷார்

தூங்கும்போது மூச்சுப்பாதையில் தசைகள் இடையூறு விளைவிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. இந்த பிரச்னையை ஸ்லீப் அப்னீயா (sleep apnea) என டாக்டர்கள் கூறுகின்றனர். குறட்டை விடும் பிரச்னையின் காரணமாக ரத்த அழுத்தம் ஏற்படலாம். உடல் பருமன் உள்ளவர்கள் என்றால் சர்க்கரை நோய் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதுபோன்ற வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளால் இதயம் பலவீனமடைதல் & மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
News February 1, 2026
பாஜகவின் கிளை அமைப்பு அதிமுக: மு.க.ஸ்டாலின்

எங்கள் கூட்டணியை, தோழமையை எதிரிகள் பிரிக்க பார்த்தனர்; ஆனால், அவர்களால் அது முடியவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கும் NDA கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று பேசிய அவர், அதிமுக தனிக்கட்சி கிடையாது, பாஜகவின் கிளை அமைப்பு என்று விமர்சித்தார். மேலும், மதுராந்தகம் கூட்டத்தில் அதிமுக பெயரை PM மோடி ஏன் உச்சரிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
News February 1, 2026
கணவன் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி

உபி.யில் திருமணமான 60 நாள்களில் 9 வருட காதல் கணவரை, மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும், மனைவி அக்கவுண்ட்டில் இருந்து ₹20,000 பணத்தை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், மனைவி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்து, பின்னர் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என நாடகமாடியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனையில் உண்மை வெளிவந்தது.


