News December 26, 2025
வங்கதேசத்தின் தலைவிதியை மாற்றும் திட்டம்: தாரிக்

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பெளத்தர்கள் என அனைவருக்கும் வங்கதேசம் சம அளவு சொந்தமானது என BNP செயல் தலைவர் தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய அவர் முதலில் ஆற்றிய உரையில், நாட்டில் அமைதியை பேணுவது நமது பொறுப்பு என வலியுறுத்தினார். மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தலைவிதியை மாற்றுவதற்கான ஒரு திட்டம் தன்னிடம் உள்ளதாகவும் கூறினார்.
Similar News
News December 27, 2025
கிருஷ்ணகிரியில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE
News December 27, 2025
VHT-ல் விராட், ரோஹித் பெறும் சம்பளம் இதுதான்

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடுவதால் நடப்பு விஜய் ஹசாரே கோப்பை(VHT) வழக்கத்தைவிட கூடுதல் கவனம் பெற்றுள்ளது. சர்வதேச போட்டிகளுக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் இருவருக்கும் இங்கு எவ்வளவு கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். VHT பொறுத்தவரை சீனியர் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு ₹60,000, மிட் லெவல் பிரிவுக்கு ₹50,000, ஜூனியருக்கு ₹40,000 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
News December 27, 2025
பார்லிமென்ட்க்குள் இனி இதை கொண்டு வரக்கூடாது!

குளிர்கால கூட்டத்தொடரின் போது, <<18594918>>திரிணமுல் காங்.,<<>> MP சவுகதா ராய், லோக்சபாவுக்குள் இ-சிகரெட் பிடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள், பென் கேமராக்கள் மற்றும் அதிநவீன எலக்ட்ரானிக் உபகரணங்களை பார்லிமென்ட் உள்ளே எடுத்து வர, MP-க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அனைத்து MP-க்களுக்கும் லோக்சபா செயலகம் அனுப்பி உள்ளது.


