News December 26, 2025

ஜனவரி 9-ல் கூட்டணியை அறிவிப்போம்: பிரேமலதா

image

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை கொடுத்த கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டதாகவும் அவர் சாபம் கொடுத்துள்ளார். மேலும், வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாகவும், அந்த மாநாட்டின் போது, தங்களின் நிலைப்பாடு, கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 29, 2025

30 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை.. ஆனந்தத்தில் கிராமம்

image

இத்தாலியின் Pagliara dei Marsi என்ற கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளில் ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. 20 பேர் மட்டுமே இருந்த ஊரில் ஸ்கூல்கள் மூடப்பட்டன, எங்கு பார்த்தாலும் முதியவர்கள் மட்டுமே காணப்பட்டனர். ஏன் இந்த கொடுமை என மனம் துவண்டு போனவர்களுக்கு, நம்பிக்கையை கொடுக்கும் விதமாக லாரா என்ற பெண் குழந்தை கடந்த 8 மாதங்களுக்கு முன் பிறந்துள்ளது. குழந்தையின் வருகையை உள்ளூர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

News December 29, 2025

BREAKING: பாமக புதிய தலைவர் அறிவிப்பு

image

பாமகவின் புதிய தலைவராக ராமதாஸை தேர்வு செய்து, சேலத்தில் நடைபெற்றுவரும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செயல்தலைவராக காந்திமதி, கெளரவ தலைவராக ஜி.கே.மணி, பொதுச் செயலாளராக முரளி சங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2026 தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுக்க ராமதாஸுக்கு மட்டுமே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News December 29, 2025

மும்பை மாநகராட்சி தேர்தலில் களமிறங்கும் தமிழ்ப் பெண்!

image

மும்பை மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தாராவியை சேர்ந்த தமிழ்ப் பெண் மஞ்சுளா கதிர்வேல் வேட்பாளராக களமிறங்குகிறார். MH-ல் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜன.15-ல் தேர்தல் நடக்கிறது. மும்பையின் 227 வார்டுகளிலும் போட்டியிடும் ஆம் ஆத்மி, மஞ்சுளா உட்பட 15 வேட்பாளர்கள் கொண்ட 3-ம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஊழல் நிறைந்த மும்பை மாநகராட்சிக்கு சில நல்லவர்கள் தேவை என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!