News December 26, 2025

புனேவில் என்ன நடக்கிறது? ஓட்டுக்கு கார், தாய்லாந்து டூர்

image

புனே மாநகராட்சித் தேர்தல்களுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் பரிசுகளை அறிவித்து, வாக்காளர்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர். ஒரு வேட்பாளர் பரிசாக தாய்லாந்து பயணத்திற்கான டிக்கெட் வழங்கியுள்ளார். பல வார்டுகளில் குலுக்கல் மூலம் எஸ்யூவி கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டவை பரிசுகள் வழங்கப்படுகின்றன. சூடுபிடித்துள்ள தேர்தல் களம் குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News January 7, 2026

மகளிர் உரிமைத்தொகை ₹2,500.. புதுவை CM அறிவித்தார்

image

புதுச்சேரியில் ஏற்கெனவே அறிவித்தபடி மகளிர் உரிமைத்தொகை ₹2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அம்மாநில CM ரங்கசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். தற்போது வழங்கப்பட்டு வரும் ₹1,000 உரிமைத்தொகையானது, வரும் 12-ம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு ₹2,500 ஆக வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் மகளிர் உரிமைத்தொகை உயரும் என CM ஸ்டாலின் அரசு விழாவில் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.

News January 7, 2026

ஆதார் அப்டேட்.. ஜூன் 14-ம் தேதி வரை இலவசம்!

image

ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, போன் நம்பர், பயோமெட்ரிக் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது அவசியம். இந்த தகவல்களை ஆன்லைனில் <>myaadhaar <<>>அல்லது maadhaar செயலி மூலம் எந்த கட்டணமும் இன்றி வரும் ஜூன் 14-ம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் சேவை மையத்தில் மார்ச்க்குள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

News January 7, 2026

NDA-வுடன் கூட்டணி அமைத்தது ஏன்? அன்புமணி விளக்கம்

image

மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காகவே அதிமுகவுடன் கைகோர்த்துள்ளதாக அன்புமணி விளக்கம் அளித்துள்ளார். 100 நாள்களாக சுற்றுப்பயணம் செய்து பாமக தொண்டர்களிடம் கருத்து கேட்டு இந்த கூட்டணி முடிவை எடுத்துள்ளதாக கூறிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெறும் என சூளுரைத்தார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!