News December 26, 2025
கடவூர் அருகே சூதாடிய மூன்று பேர்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சிந்தாமணிபட்டி குளம் அருகே முள்ளுக்காட்டில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிந்தாமணிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்து, மோகன்ராஜ் (36), முனியப்பன் (41), ராஜ்குமார் (31) ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 51 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ. 650 பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News December 31, 2025
கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
கரூர் அருகே பெண் அதிரடி கைது!

கந்தம்பாளையத்தை சேர்ந்த விசாலாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நடையனூர் அருகே கார்த்திக்கின் சகோதரி அமுதாவும் (50), அவரது மகன் ஜெகனும் வீட்டில் இருந்தபோது விசாலாட்சி மற்றும் ஆண் ஒருவர் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாலாட்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 31, 2025
கரூர்: இதைச் செய்யாவிட்டால் சிக்கல் நிச்சயம்!

பான் ஆதார் கார்டை டிசம்பர் 31ஆம் தேதியான இன்றுக்குள் இணைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் உங்களால் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியாது, வங்கிகளிடமிருந்து கடன் கூட பெற முடியாது, சில அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவது கூட சிக்கலாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. <


