News December 26, 2025
சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

சேலம் மாவட்ட காவல்துறை அறிவிப்பின்படி, இருசக்கர வாகனங்களில் மூவர் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றமாகும். இதற்கேற்ப அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்வது ஆபத்தானது, அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News January 17, 2026
சேலத்தில் வசமாக சிக்கிய பெண்!

சேலம் மூணாங்கரடு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கிச்சிபாளையத்தைச் சேர்ந்த கனிமொழி (47) என்பவரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். தகவலின் பேரில் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News January 17, 2026
மேட்டூர் அருகே கர்ப்பிணியான 11-ம் வகுப்பு மாணவி!

சேலம்: மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் காவேரிபுரத்தைச் சேர்ந்த ராஜா(25), 11-ம் வகுப்பு மாணவியைக் காதலித்து திருமணம் செய்தார். தற்போது கர்ப்பிணியான அந்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்படவே, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாணவிக்கு 17 வயதே ஆவதை அறிந்த மருத்துவர்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ராஜாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


