News December 26, 2025
சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு குறைவு

2025-ம் ஆண்டில் சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்து உள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது . சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வரை, சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கடந்த ஆண்டை விட 10%க்கும் மேல் குறைந்துள்ளன.
Similar News
News December 28, 2025
சென்னையில் 582.16மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

சென்னை மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை அகற்றிடும் புதிய நடவடிக்கை கடந்த 11.10.25 அன்று தொடங்கப்பட்டது. அதன்படி, இதுவரை 12 சனிக்கிழமை நாட்களில் 1,587 பேரிடம் இருந்து 582.16 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
News December 28, 2025
சென்னை: பாலியல் வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை

சென்னை 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தாய் மற்றும் கள்ளக்காதலர் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. “ஒழுக்கத்துடன் குழந்தைகளை வளர்க்கும் புனிதப் பொறுப்பை தாய் கைவிட்டால், சமூகத்தின் அடித்தளம் வீழும்” என நீதிபதிகள் பி. வேல்முருகன், எம். ஜோதிராமன் கருத்து தெரிவித்தனர்.
News December 27, 2025
சென்னை: டிகிரி முடித்தவரா நீங்கள்? SBI-ல் வேலை ரெடி!

1. SBI வங்கியில் 996 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வித்தகுதி: எதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.51,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்கும் கடைசி தேதி: ஜன.02. நல்ல வாய்ப்பு, மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


