News December 26, 2025
திருப்பத்தூரில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ராம்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி நிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் தனித்துணை ஆட்சியர் பூஷண குமார் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Similar News
News December 27, 2025
திருப்பத்தூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
திருப்பத்தூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News December 27, 2025
திருப்பத்தூர் காவல்துறை அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் நாள்தோறும் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. இன்றைய (டிச-27) செய்தியில் இணையத்தில் உங்களது பணத்தை பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுக்கள் உள்ளது, எனவே எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் இதுகுறித்த புகார் அளிக்க #1930 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் என பதிவிட்டுள்ளனர்.


