News December 26, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(டிச.25) இரவு 10 முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
Similar News
News January 13, 2026
தஞ்சை: உங்க தொகுதி MLA நம்பர் இருக்கா?

1. திருவிடைமருதூர் – கோவி.செழியன் (94441 62050)
2. கும்பகோணம் – அன்பழகன் (9443383283)
3. திருவையாறு – துரை.சந்திரசேகரன் (9443325777)
4. தஞ்சாவூர் – நீலமேகம் (94426 30350)
5. ஒரத்தநாடு – வைத்தியலிங்கம் (94439 21166)
6. பேராவூரணி – அசோக் குமார் (94433 79922)
7. பட்டுக்கோட்டை – அண்ணாதுரை (94435 45824)
8. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News January 13, 2026
தஞ்சை கமிஷனர் முக்கிய அறிவிப்பு

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும், போகிப் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகள், ஈரக்கழிவுகள் மற்றும் உலர் கழிவுகளை, எரிக்காமல் சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து வார்டுகளிலும் இன்று மற்றும் நாளை குப்பை சேகரிப்பு மையங்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
News January 13, 2026
தஞ்சை கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் (49). இவரது வீட்டில் கடந்த கடந்த 4.7.2025 அன்று கதவை உடைத்து உள்ளே புகுந்த அமர்நாத் (24), சுகுமார் (28) ஆகியோர் வீட்டில் இருந்த 41 பவுன் தங்க நகைகள், ரூ.50,000 பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இவ்வழக்கு நேற்று தஞ்சை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளிகள் இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


